Home இலங்கை அகமத் தாலிப் மற்றும் லுக்மான் தாலிப் சொத்துக்களை முடக்குவது தொடர்பில் ஆராயும் இலங்கை அதிகாரிகள்

அகமத் தாலிப் மற்றும் லுக்மான் தாலிப் சொத்துக்களை முடக்குவது தொடர்பில் ஆராயும் இலங்கை அதிகாரிகள்

0

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் தொடர்புடையவர்களாக கூறப்பட்டு,
இலங்கையர்களான அகமது தாலிப் அவரது மகன் லுக்மான் தாலிப் அகமது ஆகியோர் மீது
குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக அறியப்படுகிறது.

 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

அவர்கள் இன்னும் அந்த நாட்டினால் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில்
விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதன் பின்னரே அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கப்படும்
என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இலங்கையில் அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய
பயங்கரவாத விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பின் ஊடகங்களில்
தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களின் பெயர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் பட்டியலிலும்
சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமக்கும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கும் தொடர்புகள்
இல்லையென்று மறுத்துள்ள அகமத் தாலிப், பொய் குற்றச்சாட்டுக்காக இலங்கை
அரசாங்கத்தின் மீது, வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/sl-probes-freeze-on-talip-assets-1746381685

NO COMMENTS

Exit mobile version