Home இலங்கை சமூகம் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வெறும் காட்சியாக இருக்காது: ஐக்கிய நாடுகள் நம்பிக்கை

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வெறும் காட்சியாக இருக்காது: ஐக்கிய நாடுகள் நம்பிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில், இலங்கையின் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு, வெறும் காட்சியாக மட்டும் இருக்காது என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்ட்ரே பிரான்ஞ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் உறுதிமொழிகள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தேசிய நிகழ்வின் போது உரையாற்றிய பிராஞ்ச், மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகள் குறித்தும் திருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் “எங்கள் உரிமைகள், எங்கள் எதிர்காலம், இப்போது” என்ற தொனிப்பொருளில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை இன்று கொண்டாடியது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.டி.பி. தெஹிதெனிய இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version