Home இலங்கை சமூகம் போதையால் சீரழிக்கப்படும் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் : வைத்தியர் கூறும் அதிர்ச்சி தகவல்

போதையால் சீரழிக்கப்படும் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் : வைத்தியர் கூறும் அதிர்ச்சி தகவல்

0

15 வயது தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக சாவகச்சேரி தள வைத்தியசாலையின்  உள நல வைத்தியர் வினோதா அச்சுதன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் முப்பரிமாணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதற்கு காரணமாக பலவற்றைக் குறிப்பிட்டாலும் நண்பர்களுடன் சேர்ந்தே இப்பழக்கத்திற்கு அடிமையானதாக அதிகமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெரோயின் பாவனையில் இருந்து விடுபடுவதற்கு என்ற தவறான வழிநடத்தலுடன் போதை மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

பெரும்பாலும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதே போதை மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…..

https://www.youtube.com/embed/EwbzTEG7HBM

NO COMMENTS

Exit mobile version