Home இலங்கை சமூகம் எல்ல பேருந்து விபத்து….தொடரும் மீட்பு நடவடிக்கைகள் : உலங்கு வானூர்திகள் தயார் நிலையில்

எல்ல பேருந்து விபத்து….தொடரும் மீட்பு நடவடிக்கைகள் : உலங்கு வானூர்திகள் தயார் நிலையில்

0

எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று (4) இரவு ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக உலங்கு வானூர்தி தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் மருத்துவக் குழுவினருடன் கூடிய Bell-412 உலங்கு வானூர்தியும் வீரவில விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை கொழும்புக்கு வான்வழி ஊடாக கொண்டு செல்ல அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளில் உதவ அவை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படை

விபத்து இடம்பெற்ற போது மீட்பு பணிகளுக்காக, இலங்கை விமானப்படையின் விசேட மீட்புக் குழுவையும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கண்காணிப்பு நோக்கங்களுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் நேற்று பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இரவு நேரத்தில் விபத்து நடந்ததால், மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்த நிலையில், விமானம் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version