பொதுஜன பெரமுனவின் தெஹியத்தகண்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி இரவு இவர் கைது செய்யப்பட்டதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் 9 கிராம் 95 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, ரத்மல் கந்துர, தெஹியத்தகண்டிய பகுதியை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
