Home இலங்கை சமூகம் சின்ன வெங்காய இறக்குமதி – யாழில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசிடம் கோரிக்கை

சின்ன வெங்காய இறக்குமதி – யாழில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசிடம் கோரிக்கை

0

நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சுவேலி (Achchuveli) – பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

சின்ன வெங்காயச் செய்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அச்சுவேலி – பத்தமேனி
வெங்காய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தம்மால் உற்பத்தி செய்யப்படும் சின்ன
வெங்காயத்திற்கு நிர்ணயமான போதிய விலை கிடைக்காமையால் தாம்
பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நிர்ணய விலைக்கு விற்க முடியவில்லை

சின்ன வெங்காயத்தினை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவது வரையிலான கால பகுதியில் அதுகளவான செலவினங்கள் தமக்கு ஏற்படுவதால் அதனை நிர்ணய விலைக்கு விற்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தினால் வெளிநாட்டில் இருந்து சின்ன
வெங்காய இறக்குமதி செய்யப்படும் நிலை அதிகரித்துள்ளமையால் தமது உற்பத்திக்கான
நிர்ணய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குறிப்பிட்டனர்.

இதனால் அரசாங்கம் வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்தி தமக்கான நிர்ணய விலையை
கிடைக்கச் செய்ய உதவுமாறு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)
ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

NO COMMENTS

Exit mobile version