Home இலங்கை சமூகம் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக தென் மாகாணத்தில் ரணிலின் நடவடிக்கை

கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக தென் மாகாணத்தில் ரணிலின் நடவடிக்கை

0

தென் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு 200 நவீன வகுப்பறைகள் மற்றும் 2,000 டெப் கணினிகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் காலி (Galle) ஹோல் டி கோல் மண்டபத்தில் இன்று (06) நடைபெற்றுள்ளது.

கற்றல் சூழல்

கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த திட்டத்திற்கு இந்திய உதவியுடன் 300 பில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரனவின் (Ramesh Pathirana) வேண்டுகோளுக்கு இணங்க இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அதிபர் ஊடகப் பிரிவு (PMD) குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version