Home இலங்கை சமூகம் முகநூல் தொடர்பில் பரவும் பாலியல் நோய்: எச்சரிக்கும் அரசு

முகநூல் தொடர்பில் பரவும் பாலியல் நோய்: எச்சரிக்கும் அரசு

0

முகநூல் (Facebook) காரணமாக இந்த ஆண்டில் பாலியல் நோய் பரவல்கள் (STDs) இரட்டிப்பாகியுள்ளதாக அநுராதபுரம் பாலியல் சுகாதார சேவை மையத்தின் பாலியல் நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி ஹேமா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இவற்றில் பொதுவான பரவும் பாலியல் நோயான சிபிலிஸ் என்றும், அவற்றில் HIV தொற்றாளர்களும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் இந்த நிலைமையை சுட்டிக்காட்டும் அவர்,

“முகநூல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பெரும்பாலான ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள்.

சிபிலிஸ் நோய்

ஒரே பெண் முகநூல் மூலம் அதிக
எண்ணிக்கையிலான ஆண்களுடன் தொடர்பில் காணப்பட்டதால் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளன.

இது ஒரு மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை பாதித்துள்ளது.

எனவே, முகநூல் தொடர்புகளில் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். பல ஆண்டுகளுக்கு முன்பே சிபிலிஸ் நோய் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டாலும், அது இன்னும் பாலியல் ரீதியாக பரவும் நோயாகும்” எனத் தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version