Home இலங்கை சமூகம் புதிய பாப்பரசர் தேர்வு : ட்ரம்பை விமர்சித்தாரா கர்தினால் மல்கம் ரஞ்சித்..!

புதிய பாப்பரசர் தேர்வு : ட்ரம்பை விமர்சித்தாரா கர்தினால் மல்கம் ரஞ்சித்..!

0

 அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ஒருவரை முதன்முறையாக பாப்பரசராக தேர்ந்தெடுக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump),வத்திக்கானிடம் செல்வாக்கு செலுத்தியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(cardinal malcolm ranjith),குற்றம் சாட்டியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி போலியானது என்று கர்தினால் ரஞ்சித்தின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று(10) தெரிவித்தார்.

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் கர்தினால் ரஞ்சித் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் போலியானது என்று அருட்தந்தை பெர்னாண்டோவின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version