3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வை நாளை 25 ஆம் திகதி பார்க்க முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, சனி, மற்றும் சந்திரன் ஆகிய ஆறு கோள்களே இவ்வாறு தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் இக்கோள்கள், நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வானில் தெரியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளார்.
வெற்றுக் கண்களால்
இலங்கையர்கள் இந்த அரிய நிகழ்வை வெற்றுக் கண்களால் அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை காணமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிகாலையில் மூன்று பிரகாசமான பொருட்களை மக்கள் நெருக்கமாக
பார்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வை காண்பதற்கு தெளிவான வானம் கொண்ட திறந்தவெளிகளில் நின்று பார்வையிடுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
