Home இலங்கை சமூகம் 1000 மெகாவோட்டைத் தாண்டியுள்ள இலங்கையின் சூரிய சக்தி மின் உற்பத்தி

1000 மெகாவோட்டைத் தாண்டியுள்ள இலங்கையின் சூரிய சக்தி மின் உற்பத்தி

0

இலங்கையின் (Sri Lanka) தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவோட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு (Ministry of Power and Energy) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 944 மெகாவோட்கள், மேற்கூரை சூரிய மின்சக்தி மூலம் தேசிய மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன

அத்துடன், 156 மெகாவோட்கள், நிலத்தடி சூரிய மேம்பாட்டிலிருந்தும் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சூரிய சக்தி மின் உற்பத்தி

இந்த ஆண்டு இறுதிக்குள் மேற் கூரை மேம்பாட்டிலிருந்து 1,044 மெகாவோட் மின்சாரத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீண்ட கால உற்பத்தித் திட்டத்தில், அடுத்த 4 ஆண்டுகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 150 மெகாவோட் என்ற அளவில் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 132 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/solar-power-generation-exceeding-1000-mw-in-sl-1719550018

NO COMMENTS

Exit mobile version