Home இலங்கை பொருளாதாரம் அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!

அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!

0

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 10, 400 மெற்றிக் தொன் அரிசி கொள்வனவானது எதிர்வரும் வாரம் இறக்குமதி செய்யப்படும் என ரவீந்திர பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதன்படி, 07.01.2025 அன்று இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அரிசி தட்டப்பாடு

மேலும், சந்தையில் நிலவும் அரிசி தட்டப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய முதலாவதாக விலைமனுகோரல் செய்யப்பட்ட 5200 மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது என்றும், இதற்கமைய எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் 10400 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version