Home இலங்கை சமூகம் தந்தையை பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தையை பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

களுத்துறை நாகொட பிரதேசத்தில் 06 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், வீட்டில் அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.


மகனுக்கு அதிர்ச்சி

உயிரிழந்தவரின் மகன் இத்தாலியில் வாழ்ந்து வந்த நிலையில் அவரது தந்தைக்கு 6 மாதங்களாக தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட போதிலும் அவர் பதிலளிக்கவில்லை.

இதன் காரணமாக தந்தையை பார்ப்பதற்காக இத்தாலியில் இருந்து மகன் இலங்கை வந்துள்ளார்.

வீட்டுக்கு சென்ற மகன் கதவைத் திறந்தபோது, ​​உருகிய சதையுடன் கூடிய எலும்புக்கூடுகள் மட்டுமே கட்டிலில் கிடந்ததனை மகன் அவதானித்துள்ளார்.

சடலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இவரின் தந்தையா என்பதை உறுதிப்படுத்த DNA என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/son-returned-from-italy-father-bones-found-1729532151

NO COMMENTS

Exit mobile version