Home விளையாட்டு இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய இலங்கை வீரர்

இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய இலங்கை வீரர்

0

இந்திய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணியின் வீரர் சொனால் தினுஷ சதம் விளாசியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதன்படி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் 2 ஆவது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 503 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

சொனால் தினுஷ சதம்

இதையடுத்து நேற்றும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலும் சதத்தை பதிவு செய்த தினுஷ, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதத்தை தனதாக்கியுள்ளார்.  

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இவ்வாறு தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டியில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்களாக அவர் இந்த சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

கடந்த 15ம் திகதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sonal-dinusha-hits-2nd-test-century-against-india-1787722271

NO COMMENTS

Exit mobile version