2013ஆம் ஆண்டில் வெளிவந்து தமிழ் திரையுலகின் கல்ட் படமாக மாறியுள்ளது சூது கவ்வும். நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
சூது கவ்வும் 2
இப்படத்தின் இரண்டாம் பாகம் சூது கவ்வும் 2 திரைப்படம் நேற்று வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருந்தார். எஸ்.ஜே. அர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.
9 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் அகில உலக சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் மிர்ச்சி சிவா. இவருடைய நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்று, அது கண்டிப்பாக மக்களை என்டர்டைன்மெண்ட் செய்யும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.
ஆனால், சூது கவ்வும் 2 சற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தான் கொடுத்துள்ளது. இப்படத்தில் சிவாவுடன் இணைந்து கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி. சந்திரசேகர் ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல்
இந்த நிலையில் நேற்று வெளிவந்த சூது கவ்வும் 2 திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 45 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.