தெற்காசியாவில் இடம்பெறவுள்ள கால்பந்து போட்டிக்கு திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார்.
பங்களாதேஷில் 11 ஆம் திகதி 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றவுள்ள இலங்கை தேசிய அணிக்கு திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவியான குவேதா தெரிவாகி இருந்தார்.
தேசிய அணி
இதற்காக அவர் இலங்கை குழாமுடம் இணைந்து பங்களாதேஷ் பயணமாகியுள்ளார்.
இவ் அணியினர்
11.07 பங்களாதேஷ் அணியுடனும்
13.07 பூட்டான் அணியுடனும்
15.07 நேபால் அணியுடனும்
17.07 நேபால் அணியுடனும்
19.07 பங்களாதேஷ் அணியுடனும்
21.07 பூட்டான் அணியுடனும் போட்டியில் பங்குபற்றவுள்ளது.
இந்த பயணத்தில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி இலங்கை அணிக்காக வெற்றியை பெற்றுதர வேண்டும் எனவும் திருகோணமலை மண்ணுக்கும் பெருமை சேர்த்துவர வேண்டும் எனவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.