Home சினிமா தென்னிந்திய சினிமாவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள்.. லிஸ்ட் இதோ

தென்னிந்திய சினிமாவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள்.. லிஸ்ட் இதோ

0

பாக்ஸ் ஆபிஸ்

ஒரு திரைப்படத்தின் வசூல் குறித்த பேச்சு அப்படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் சினிமா வட்டாரத்தை தாண்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

எனக்கு பிடித்த நடிகரின் படம் இவ்வளவு வசூல் செய்துவிட்டது, எனக்கு பிடித்த அந்த நடிகரிடம் படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது என ரசிகர்கள் மத்தியில் வசூல் மோதல் நடைபெற்று வருகிறது.

பரம் சுந்தரி: திரை விமர்சனம்

சமீபத்தில் வெளிவந்த கூலி படம் கூட ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என சினிமா வட்டாரத்திலேயே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக இதுவரை உலகளவில் ரூ. 505 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதுவரை ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0, ஜெயிலர் மற்றும் கூலி ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

500 கோடி

இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

1. பாகுபலி

2. பாகுபலி 2

3. 2.0

4. ஆர்.ஆர்.ஆர்

5. கே.ஜி.எப் 2

6. ஜெயிலர்

7. பொன்னியின் செல்வன்

8. லியோ

9. சலார்

10. கல்கி 2898AD

11. புஷ்பா 2
12. கூலி

NO COMMENTS

Exit mobile version