Home உலகம் குறைவடையும் பிறப்பு விகிதம் : முதியோர் நாடாக மாறும் தென்கொரியா

குறைவடையும் பிறப்பு விகிதம் : முதியோர் நாடாக மாறும் தென்கொரியா

0

குறைவடைந்து செல்லும் பிறப்பு விகிதங்களால் கிழக்கு ஆசியாவிலுள்ள தென்கொரியாவில்(south korea) முதியோர் தொகை அதிகரித்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவின் மக்கள் தொகை 5.17 கோடி. இங்கு 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்’ என தகவல்களட தெரிவிக்கின்றன.

இது குறித்து தென்கொரிய உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் வருமாறு,

முதியோர்களின் எண்ணிக்கை

தென் கொரியாவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.024 கோடியாக உள்ளது. இது மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். அதேபோல், பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது.

சரிவடைந்த பிறப்பு விகிதம்

கடந்த 2023ம் ஆண்டு 0.72 சதவீதமாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 22 சதவீதம். அதேநேரத்தில் 18 சதவீதம் பேர் ஆண்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது 65 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 7% க்கும் அதிகமானவர் இருக்கும் நாடுகளை வயது முதிரும் சமூகம் Aging society என்றும், 14% க்கு மேல் உள்ளவர்களை வயதான சமூகம் Aged society என்றும், 20% க்கு மேல் உள்ளவர்களை அதிக வயதானவர் சமூகம் super aged society என்றும் அழைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version