Home உலகம் மன்னர் மீது சேற்றை வீசி கூச்சலிட்ட மக்கள்! ஸ்பெயினில் பரபரப்பு சம்பவம்

மன்னர் மீது சேற்றை வீசி கூச்சலிட்ட மக்கள்! ஸ்பெயினில் பரபரப்பு சம்பவம்

0

ஸ்பெயின் (Spain)  நாட்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற மன்னர் பெலிப் மற்றும் ராணியார் லெதிசியா மீது மக்கள் சேற்றை வீசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரதமர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீதும் சேற்றை வீசி கொலைகாரர்கள் எனவும் மக்கள் கூச்சலிட்டுள்ள சம்பவமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் தற்போது கடும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் 200 ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஸ்பெயின்  பெருவெள்ளம்

இந்நிலையிலே, கடந்த செவ்வாய்க்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை வலியுறுத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஏன் வெள்ளம் பெருக்கெடுத்த பிறகு அனுப்பப்பட்டது என்ற கோபத்தினாலேயே மக்களை பார்வையிட வந்த மன்னர் மற்றும் ராணியார் மீது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் நடந்த துயர சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் Pedro Sánchez மற்றும் வலென்சியாவின் பிராந்திய தலைவர் Carlos Mazón ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொந்தளிக்கும் மக்கள்

எதிர்பாராமல் மக்கள் சேற்றை வீசவும் மெய்க்காப்பாளர்கள் குடைகளைப் பயன்படுத்தி பிரதமரை விரைவாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

ஆனால் மன்னர் பெலிப் தமது பயணத்தை தொடர்ந்ததுடன், பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிராந்தியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நகரத்திற்குச் செல்வதற்கான மன்னரின் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டதாக ஸ்பெயினின் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை வானிலை ஆய்வு மையம் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மேலும் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version