Home இலங்கை குற்றம் வெளிநாட்டிலிருந்து போதைப்பொருளை தருவித்து விநியோகித்த ஸ்பெயின் பிரஜை கைது

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருளை தருவித்து விநியோகித்த ஸ்பெயின் பிரஜை கைது

0

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளை தருவித்து விநியோகம் செய்வதில் ஈடுபட்ட ஸ்பெயின் பிரஜையொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் காலியில் நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

காலி பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 4 கிராம் கொக்கேன் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் இருந்து தபால் பொதிகள் ஊடாக போதைப் பொருளைத் தருவித்து விநியோகம் செய்வதில் சந்தேக நபர் ஈடுபட்டிருந்தமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version