Home இலங்கை சமூகம் வாக்காளர் அட்டைகள் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

வாக்காளர் அட்டைகள் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இ- சேவை இணையத்தளத்துக்கு பிரவேசித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இருப்பது கட்டாயமானதல்ல.

இந்நிலையில் தேருநர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியான அடையாள அட்டையொன்றை வைத்துள்ள வாக்காளர் எவரும் தமக்கு குறித்தொதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் இ-சேவை

மேலும்,  “https://eservices.elections.gov.lk என்ற தேர்தல் இ-சேவை இணையத்தளத்துக்குள் பிரவேசித்து அதிலுள்ள குடிமக்களுக்கு என்ற பகுதியில் இருக்கும் தேருநர் பதிவு விபரம் தேடல் என்ற இ- சேவையினுள் பிரவேசிக்க வேண்டும்.

தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை உள்ளிட்டு தகவல்களை ஆராய வேண்டும்.

அதன் துணையுடன் கிடைக்கின்ற தகவல்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான தேருநர் பதிவு விபரம் – உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 என்பதனுள் பிரவேசித்தல் வேண்டும்.

அப்போது 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் இடாப்பில் தமது தேருநர் இடாப்பு பதிவு தகவல்களை பார்வையிட முடியும்.

அதன் பிறகு தமது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு வாக்காளர் அட்டை அச்சிடு என்பதன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பதிவிறக்க முடியும்” என குறித்த அரிகாரி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version