Home இலங்கை சமூகம் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடா…! வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடா…! வெளியான அறிவிப்பு

0

இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

 ஆனால் சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வழமைபோல் விநியோகம்

அத்துடன் போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோல் நடைபெறுவதாகவும், வீதி தடைகள் நிலவும் பகுதிகள் வழமைக்குத் திரும்பியவுடன் அப்பகுதிகளுக்கும் எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள 1311 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் லிட்ரோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version