Home இலங்கை குற்றம் விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம்

விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம்

0

 பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய இவ்வாறு விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் இந்த மோட்டார் சைக்கிள் படையணியின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில் இந்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி செயற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படையணியில் சுமார் 46 பேர் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version