Home இலங்கை சமூகம் அனர்த்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க விசேட குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தல்!

அனர்த்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க விசேட குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தல்!

0

அனர்த்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.

 நாடாளுமன்றத்தில் இன்று (05)  நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசாங்கத்தின் அலட்சியத்தால் தான் அனர்த்தத்தின் போது உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் தீவிரமடைந்துள்ளன. 

விசேட குழு

ஆகவே இது குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

அதேபோல் நெருக்கடியான நிலையின் போது நீர்ப்பாசனத்துறை திணைக்களம் செயற்பட்ட விதம் குறித்து ஆராய குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.

அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

அதேபோல் அரச அதிகாரிகளின் சுயாதீனத்தன்மை இல்லாதொழிக்கப்பட்டுள்ளதால் அரச அதிகாரிகள் சிறந்த முறையில் செயற்படவில்லை.இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version