Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

0

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் (19.10.2024) கிளிநொச்சி
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும்
முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உதவித்தேர்தல் ஆணையாளர்
உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விசாரணை பிரிவு

அத்துடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபரினால் பெண்கள்
மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/special-discussion-about-general-election-1729378316

NO COMMENTS

Exit mobile version