Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

0

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

மாநகர சபை கட்டளைச் சட்டம் 252 இன் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (1) இன் பந்தி (அ) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எச். அபயரத்னவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும 274 பிரதேச சபைகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும், உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்களை, ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையகம் பரிசீலித்து வருகிறது.      

NO COMMENTS

Exit mobile version