பழங்குடியின மக்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்க வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பழங்குடியினத்தவர்கள் காடுகளுக்குள் பிரவேசித்து, வன வளங்களில் இடையூறு இன்றி வாழ்க்கையை நடத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக தம்பான மற்றும் ரதுகல பழங்குடியினருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு அடையாள அட்டைகள்
ரதுகல பழங்குடியினத்தவர்களின் தலைவரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பழங்குடியின சமூகத் தலைவர்களால் பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று வனவிலங்குத் துறை கூறுகிறது.