Home முக்கியச் செய்திகள் தலைமறைவான முக்கிய புள்ளிகள்: திண்டாடும் விசாரணை அதிகாரிகள்!

தலைமறைவான முக்கிய புள்ளிகள்: திண்டாடும் விசாரணை அதிகாரிகள்!

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஆகிய மூன்று சந்தேக நபர்களைக் கைது தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விசாரணைகளானது, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் கொழும்பு குற்றப்பிரிவினால் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ராஜித சேனாரத்னவை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, ஒரு மாத காலமாக விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில்,
இதுவரை அவர் மறைந்திருக்கும் இடத்திணை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரியவருகிறது.

குற்றப்பிரிவு விசாரணை

அவர் கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவரைத் தேடி வருகிறது.

இதேவேளை, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ மற்றும் அதுரலிய ரத்தன தேரரை கைது செய்ய கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதோடு அவர்களும் பல நாட்களாக தலைமறைவாகியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களைக் கைது செய்யவோ அல்லது அவர்கள் இருக்கும் இடம் பற்றிய எந்த தகவலையும் இது வரை கண்டறிய முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version