Home இலங்கை குற்றம் நாடு தழுவிய விசேட நடவடிக்கை: பலர் கைது

நாடு தழுவிய விசேட நடவடிக்கை: பலர் கைது

0

 நாடு தழுவிய விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும்
சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மொத்தமாக
1,241 பேர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவின் பேரிலும், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஒருங்கிணைப்பிலும் இந்த
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பலர் கைது

பொலிஸ் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையில் 254,679 மில்லிகிராம் ஐஸ்
போதைப்பொருள், 112,567 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,738,356 மில்லிகிராம்
கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21,132 பேர் சோதனைக்கு
உட்படுத்தப்பட்டதாகவும், 7,922 வாகனங்கள் மற்றும் 6,545 உந்துருளிகளும் சோதனை
செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

NO COMMENTS

Exit mobile version