Home இலங்கை சமூகம் லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

0

சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழக்கம் போல் இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம் வழங்க ஏற்பாடு

சாலை சிரமங்கள் உள்ள பகுதிகள் சீர் செய்யப்பட்டவுடன் எரிவாயு விநியோகம் மீண்டும் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது பகுதியில் தற்போதைய எரிவாயு விநியோகம் குறித்த தகவல்களை அறிய 1311 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version