Home இலங்கை சமூகம் வடக்கு மாகாண சுதேச வைத்திய துறையில் விசேட நடவடிக்கை

வடக்கு மாகாண சுதேச வைத்திய துறையில் விசேட நடவடிக்கை

0

வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தை, மக்கள் சேவைக்கு மிக
நெருக்கமான, அணுகத்தக்க மற்றும் செயல்திறனான இடத்தில் அமைப்பதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாகாண நிர்வாக அலுவலகங்களை
யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மட்டுமே வைத்திருக்காமல், மாகாணம்
முழுவதுக்கும் அணுகுமுறையை சமமாக்கும் வகையில் பல திணைக்களங்கள்
நிலப்பரப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இதனை கூறியுள்ளார்.

காணித் திணைக்கள அலுவலகம் 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுநர், 

கிளிநொச்சியில் காணித் திணைக்கள
அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதும், மாங்குளத்தில் நீர்பாசனத் திணைக்களம்
செயல்பட்டு வருகின்றதும் அதன் எடுத்துக்காட்டுகளாகும்.

இதேபோன்று, சுதேச
வைத்தியத்துறையையும் மக்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் மையத்திலேயே நாம்
அமைப்போம்.

நீங்கள் சேவையாற்றத் தயாராகுங்கள் — உங்களின் உரிமைகளையும் நலன்களையும்
பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமும் மாகாண நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

உங்களின் சேவையின் தொடக்கம் இன்று. அந்த சேவையின் அர்த்தத்தை மக்கள்
தீர்மானிப்பார்கள். நீங்கள் அவர்கள் மனதில் நம்பிக்கையின் விளக்காக விளங்கிட
வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version