Home முக்கியச் செய்திகள் ரணிலின் கைது : திலீப பீரிஸுக்கு சிறப்பு காவல்துறை பாதுகாப்பு

ரணிலின் கைது : திலீப பீரிஸுக்கு சிறப்பு காவல்துறை பாதுகாப்பு

0

மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸுக்கு (Dileepa Peiris) சிறப்பு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதை தொடர்ந்து நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்பு 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான உயர்மட்ட வழக்கில் சட்டமா அதிபர் துறை சார்பாக திலீப பீரிஸ் முன்னிலையாகியுள்ளார்.

வெளிநாட்டு பயணத்தின் போது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22ஆம் திகதி பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரது வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இன்று (26.08.2025) நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version