Home இலங்கை அரசியல் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கினாரா

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கினாரா

0

 தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி இரவு 8:30 மணி அளவில் சூரியகாந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி முடித்துவிட்டு வீடு செல்லும் போது கழுகல விகாரைக்கு அருகாமையில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலர் தம்மை தாக்கியதாக பொலிஸ் அவசர சேவைக்கு குறித்த உத்தியோகத்தர் தொலைபேசி வழியாக முறைப்பாடு செய்திருந்தார்.
கொலன்ன போலீஸ் நிலையத்திற்கு இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரவு 10.10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார, களுகலவிலிருந்து ஹால்வின்ன பகுதிக்கு கப் ரக வாகனத்தில் பயணத்தை கொண்டிருந்தபோது சூரியகாந்த பொலிஸ் நிலையத்தின் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மோட்டார் சைக்கிளை குறுக்காக நிறுத்தி தம்மை தாக்க முயன்றதாக கொலன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் களுகல விகாரைக்கு அருகாமையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக கூறப்படும் போலீஸ் உத்தியோகத்தர் கொலன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சுவாசத்தில் அல்கஹால் வாசனை இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அவரது சிறுநீர் மாதிரியை சோதனை செய்த போது அல்கஹால் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொலிஸ் சுத்தியோகத்தர் மதுபானம் அருந்தி இருந்தாரா என்பதை கண்டறிவதற்காக ரத்த மாரியைக் கொண்டு பரிசோதனை ஒன்றும் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் அம்பிலிபிடடி்ய பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அவருடன் இருந்த கும்பலும் தம்மை தாக்கியதாக பொலிஸ் உத்தியோகத்தர் குற்றம் சுமத்தும் அதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தார் தம்மை தாக்க முயனற்தாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version