Home இலங்கை சமூகம் மோடியின் பிறந்த தினத்திற்காக யாழில் விசேட பூஜை வழிபாடுகள்

மோடியின் பிறந்த தினத்திற்காக யாழில் விசேட பூஜை வழிபாடுகள்

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று(17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

அத்துடன், சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் இதன்போது நடாத்தப்பட்டுள்ளன. 

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக்
குருக்கள் தலைமையில் நடைபெற்ற குறித்த பூஜை வழிபாடுகளில் ஆலயத்தொண்டர்கள்
பக்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

2015ஆம் ஆண்டு விஜயம் 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு இலங்கை விஐயத்தின் போது யாழ்
கீரிமலை நகுலேஸ்வரர் சந்நிதானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version