யாழ். எழுவைதீவு பொதுமக்களின் குடிநீர் தேவையினை
பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது
தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
எழுவைதீவிற்கு விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபரால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், எழுவைதீவு ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை
கேட்டறிந்து கொண்டதோடு, எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள்
,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும்
அரசாங்க அதிபர் கேட்டறிந்து கொண்டார்.
நிதி ஒதுக்கீடு
தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி
அபிவிருத்தி வேலைத் திட்டங்களினையும் நேரடியாக பார்வையிட்டார்.
அத்தோடு அண்மையில் ஏற்பட்ட “டித்வா” புயலினால் கண்ணகி அம்மன் இறங்குதுறை
பாரியளவில் சேதமடைந்து ஆபத்தான நிலைமையில் காணப்படுவதை அவதானித்த அரசாங்க
அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு
தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
