Home இலங்கை சமூகம் பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட சுற்றிவளைப்பு

பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட சுற்றிவளைப்பு

0

இலங்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறித்த சுற்றிவளைப்பை முன்னெடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார (Asela Bandara) தெரிவித்துள்ளார்.

 அத்தியாவசியப் பொருட்கள் 

இதன்படி, பண்டிகைக் காலங்களில் காலாவதியான மற்றும் மாற்றப்பட்ட தகவல்களுடன் பல பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் விசேட அவதானத்துடன் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, ஆடைகள், மின்சாதனங்கள் மற்றும் இதர பொருட்களும் அதிக தேவையுடன் விற்பனை செய்யப்படுவதால், இது தொடர்பாகவும் சோதனை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்பினால் 1977 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version