Home இலங்கை சமூகம் நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள்! வெளியான காரணம்

நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள்! வெளியான காரணம்

0

நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளுக்காக 2000 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தில், விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக குறித்த உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சோதனை நடவடிக்கை

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுடா இதனை தெரிவித்துள்ளார்.

அந்த சோதனைகளின் போது உணவகங்களில் உள்ள சமைத்த உணவுகளை பரிசோதிக்கும் பணியே பிரதானமாக இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் உணவு மற்றும் பானங்களின் தூய்மை தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பல தொற்று நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version