எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட தொடருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விசேட தொடருந்து சேவைகள்
அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையே மேலதிக விசேட தொடருந்து சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையே மற்றொரு விசேட தொடருந்து சேவை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து சேவைகள் மே 9 முதல் 13 வரை இயக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
