கடுகன்னாவ பகுதியில் நாளை (24) உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மாவனல்லையில் இருந்து கொழும்பு-கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் இந்த போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பரீட்சார்த்திகளும் வழக்கத்தை விட முன்னதாகவே பரீட்சை மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அவசர தொலைபேசி எண்கள் அறிமுகம்
குறித்த வீதி மூடப்பட்டுள்ளதால் மாணவர்களை பரீட்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று வழிகள் பயன்படுத்தப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து உதவி தேவைப்படும் பரீட்சாத்திகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அனர்த்த மேலாண்மை மையம்: 117, பரீட்சை பிரிவு: 1911 போன்ற எண்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
