உள்ளூராட்சி மன்றங்களின் ஊழல் மற்றும் மோசடிகளைக் கண்காணிப்பதற்கான விசேட பிரிவு ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆரம்பத்தில் மாகாண மட்டத்தில் அதற்கான குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்தந்த மாகாணங்களின் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் அவற்றுக்கு வழங்கப்படும்.
விசேட பிரிவு
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினாலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகள் குறித்தும் இந்த விசேட பிரிவு கவனம் செலுத்தும்.
ஊழல், மோசடிகள் மேற்கொள்ளும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்குறித்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாகாண ஆளுனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
