Home இலங்கை சமூகம் முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

0

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பொது சுகாதார
பரிசோதகர் பிரிவில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் தேனீர் கடைகள் திடீர்
பரிேசோதனைகுட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (02.06.2025)
இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பொது சுகாதார
பரிசோதகர் பிரிவில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் தேனீர் கடைகள் மீது
நேற்றையதினம் சுகாதார பரிசோதகர்களால் சோதனை நடவடிக்கை ஒன்று
முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சட்ட நடவடிக்கை

குறித்த நடவடிக்கையின்போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் இருந்த
உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

அத்தோடு கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதோடு,
உணவு ஸ்தாபனங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார
வழிமுறைகளும் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் எடுத்து கூறப்பட்டிருந்தது.

முத்தையன்கட்டு பொதுச்சுகாதார பரிசோதகர் லோஜிதன் தலைமையில் பொதுச்சுகாதார
பரிசோதகர்கள் நதிருசன், டிலக்சன் ஆகியோர்களும் இணைந்து குறித்த சோதனை
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவில் உணவகங்கள்
மற்றும் பலசரக்கு கடைகள் பரிசோதனை செய்வது குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Exit mobile version