Home இலங்கை அரசியல் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர்

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர்

0

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே இன்றையதினம் (16.02.2025) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடன் இணைந்து அமைச்சர் யாழ். துரையப்பா விளையாட்டு
அரங்கினை பார்வையிட்டார்.

தற்போதைய நிலைமை

இந்நிலையில், துரையப்பா விளையாட்டு அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

குறிப்பாக ஒளியமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு
அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்ததோடு இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை
உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே சர்வதேச
கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய
தற்போதைய நிலைமை தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளரும் கலந்து கொண்டார்.

NO COMMENTS

Exit mobile version