Home இலங்கை சமூகம் சிங்கள சிறுமியின் கடிதத்தை கண்டு கலங்கி நின்ற தேசியத் தலைவர்..

சிங்கள சிறுமியின் கடிதத்தை கண்டு கலங்கி நின்ற தேசியத் தலைவர்..

0

2004ஆம் ஆண்டளவில் பத்திரிக்கையொன்றில் சிறுமியொருவருக்கு இதயசத்திரசிகிச்சைக்கு உதவி வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்குமாறு உத்தரவிட்டார் என்று அரசியல்- பொருளாதார ஆய்வாளர் பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

2004ஆம் ஆண்டளவில் சுனாமி போரனர்த்தம் ஏற்பட்ட போது தமிழர் தாயகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப்பிரதேசங்கள் இந்த பேரழிவால் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருந்தன.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் உலகநாடுகளின் உதவிகளை பெற்றுதருமாறு கோரினர்.

ஆனால் தென் பகுதிகளுக்கு சென்றடைந்த பல உதவிகள் தமிழ் பகுதிகளுக்கு சென்றடையவில்லை.

ஆனால், 2004ஆம் ஆண்டளவில் பத்திரிக்கையொன்றில் சிறுமியொருவருக்கு இதயசத்திரசிகிச்சைக்கு உதவி வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்குமாறு உத்தரவிட்டார்.

2003ஆம் ஆண்டளவில் சில பகுதிகளில் பேரனர்த்தமொன்று இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் அமைப்பினர் சிங்கள மக்களுக்கு உதவியதை பார்த்து மக்கள் அவர்களை வரவேற்றனர் என்று குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…  

NO COMMENTS

Exit mobile version