Home இலங்கை சமூகம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: சடலமாக மீட்கப்பட்ட நபர்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: சடலமாக மீட்கப்பட்ட நபர்

0

களுத்துறை(Kalutara) – கோரகாதுவ பிரதேசத்தில் நபர் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, உயிரிழந்தவர் மீகஹதென்ன, கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த நபரின் சடலம் நேற்று (17) பிற்பகல் கோரகாதுவ பிரதேசத்தில் காணப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சீரற்ற காலநிலை

நேற்று முன்தினம் (16) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: சடலமாக மீட்கப்பட்ட நபர் | Sri Lanka Bad Weather The Man Death In Kaltura

இந்நிலையில் நாட்டில் நிலவும் மழை வீழ்ச்சி தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version