Home இலங்கை சமூகம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சிறுவர்கள் தொடர்பான தடை

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சிறுவர்கள் தொடர்பான தடை

0

2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களை உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் இடம்பெறச் செய்வது தடைசெய்யப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடரபில். வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1980 ஆம் ஆண்டு 26 ஆம் எண் உணவுச் சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ், உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய வர்த்தமானி

அதன்படி, 2022 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகள் மற்றும் 2022 இல் வெளியிட்ட வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டிருந்த விதிமுறைகள் என்பன தற்போது புதிய வர்த்தமானியின் ஊடாக திருத்தப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version