Home இலங்கை சமூகம் லொத்தர் சீட்டிழுப்பில் 47 கோடி பணப்பரிசை வென்ற நபர்..!

லொத்தர் சீட்டிழுப்பில் 47 கோடி பணப்பரிசை வென்ற நபர்..!

0

இலங்கையின் லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றில் முதல் முறையாக மிகப்பாரிய லொத்தர் பரிசு வெல்லப்பட்டுள்ளதாக இலங்கை அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மெகா பவர் ட்ரோ எண் 2210க்கான வெற்றிச் சீட்டு, 474,599,422 கோடி ரூபாய் அடங்கிய பெரும் பரிசுத்தொகையை கொண்டுள்ளது. 

47 கோடி 

குறித்த லொத்தர் சீட்டினை கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த லொத்தர் முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா என்பவர் விற்பனை செய்துள்ளார். 

இருப்பினும், இந்த லொத்தர் சீட்டினை கொள்வனவு செய்து பணப்பரிசை வென்றவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

முன்னதாக, பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச லொத்தர் சீட்டிழுப்புக்கான வெற்றித் தொகை 230 மில்லியன் ஆகும்.

NO COMMENTS

Exit mobile version