Home இலங்கை சமூகம் மத்திய கிழக்கு பதற்ற நிலை குறித்து வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

மத்திய கிழக்கு பதற்ற நிலை குறித்து வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

0

 மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பாக பிராந்திய வலயத்திற்கு பயணங்களை மேற்கொள்ளும் அல்லது அங்கிருந்து தாய்நாடு திரும்பும் இலங்கையர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் காணப்படும் இலங்கைத் தூதரகங்கள் ஊடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

குறிப்பாக கட்டார் மற்றும் ஈராக்கில் காணப்படும் அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்களைத் தொடர்ந்து பல நாடுகள் தங்களது வான் பரப்புக்களை மூடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version