Home உலகம் உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

0

அனைத்து நாடுகளுக்கும் ஈரான் (Iran) அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், உலகிலுள்ள அனைத்து எண்ணெய் பீப்பாய்கள், சரக்குக் கப்பல்கள் மற்றும் சுற்றுலா கப்பல்கள் அனைத்தும் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து விலகி இருக்க வேண்டும் என ஈரான் அறிவித்துள்ளது.

குறித்த எச்சரிக்கையை ஈரான் இன்று (23) விடுத்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான எச்சரிக்கை

இஸ்ரேல் (Israel) – ஈரானுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அமெரிக்கா (United States) ஈரானை தாக்கியது.

இதையடுத்து, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி பாதையை நேற்றைய தினம் (22) மூடுவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று அப்பாதையில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும் என கடுமையான எச்சரிக்கையை ஈரான் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விடுத்துள்ளது.   

NO COMMENTS

Exit mobile version