Home உலகம் கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சரமாரி தாக்குதல்

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சரமாரி தாக்குதல்

0

🛑 புதிய இணைப்பு

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை நோக்கி ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளை அமெரிக்கா கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் மற்றும் கூட்டுப் படைத் தலைவர் டொன் கெய்னும் இதற்கு தலைமை தாங்குவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கட்டாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்திற்கு ஏற்படக்கூடிய தாக்குதல் அச்சுறுத்தல்களை வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தளம் மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ நிறுவல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑 முதலாம் இணைப்பு

கட்டாரில் (Qatar) உள்ள அமெரிக்க (United States) தளங்களை நோக்கி ஈரான் (Iran) தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் (Israel) முக்கிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது ஆறு ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, கட்டார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/nHeGchwh_UE

NO COMMENTS

Exit mobile version