இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பெருந்தொகை நிதியை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்..
இதன்படி, 300 மில்லியன் ரூபாவினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப, தேவையான அத்தியாவசிய பொது சேவைகளை மீட்டெடுப்பதிலும் இந்த பங்களிப்பு அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
